jump to navigation

வனப்பேச்சியிலிருந்து…. ஏப்ரல் 28, 2008

Posted by தமிழ் in கவிதை.
trackback

“சுடு சோறு கொதி கஞ்சி

வேப்பம் பழம்

பொசுக்கியதே இல்லை

ஊர் வெயில்.

குளிரூட்டப்பட்ட

நகரத்து அறைகளில் வசிக்கும்

என் மகள் கேட்கிறாள்”

………….

சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு…

பின்னூட்டங்கள்»

1. சிபி அப்பா - ஏப்ரல் 30, 2008

நம்மைப் பெற்றவர்களும், நம் பிள்ளைகளும் பிறந்த இடத்திலேயே வாழ்கிறார்கள். நாம் தான் பிறந்தது கிராமத்திலும் வாழ்வது நகரத்திலுமாக மாட்டிக்கொண்டோம்.

2. Vinitha - ஜூலை 3, 2008

தமிழ் வணக்கம்!

3. Vijay - ஜூலை 5, 2008

Nalla Kavithai

4. பிரேம்குமார் - ஜூலை 8, 2008

இரண்டாவது கவிதை அருமை. முதலாவது கொஞ்சம் விளங்கவில்லை
வாழ்த்துக்கள் தமிழச்சி


பின்னூட்டமொன்றை இடுக