jump to navigation

எஞ்சோட்டுப்பெண் மார்ச் 30, 2008

Posted by தமிழ் in எஞ்சோட்டுப்பெண்.
trackback

‘எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.

பின்னூட்டங்கள்»

1. இம்சை - ஏப்ரல் 2, 2008

புரியர மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு

2. இரண்டாம் சொக்கன் - ஏப்ரல் 3, 2008

வாங்க…வாங்க…

ஏற்கனவே இங்க ஒரு தமிழச்சி கலக்கிட்டு இருக்கார்….இப்ப நீங்களுமா….நிறைய எழுதுங்க…வாழ்த்துக்கள்.

உங்க கவிதைய படிச்சவுடனே ரொம்ப சோகமாயிட்டேன்….வேறொன்னுமில்லை, தமிழ்ல்ல இம்புட்டு வீக்கா இருக்கோமேன்னுதான்…ஹி..ஹி…ம்ம்ம்ம்

ஆனாலும் இந்த வரிகள்ல ஏதோ வசியம் தடவீருக்கீங்க…நல்லாருக்கு…

“தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.”

3. Bala - ஏப்ரல் 3, 2008

good one…


பின்னூட்டமொன்றை இடுக