jump to navigation

‘தீராதவள்’ மார்ச் 16, 2008

Posted by தமிழ் in கவிதை.
trackback

‘எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.

பின்னூட்டங்கள்»

1. Sathessh - மார்ச் 26, 2008

nice………

2. உதயகுமர் - ஏப்ரல் 3, 2008

//ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்//

கவிதை அருமை…மரத்தின் திடம் என்பதை விட கனிவு என்றுதான் சொல்லவேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் இங்கே மரத்திடம் ஆவேசம் இல்லை, அமைதி மட்டுமே நிழலாய் மிஞ்சி நிற்கிறது.

3. ஜோதிபாரதி - ஏப்ரல் 3, 2008

நல்ல கவிதை!
வலைப்பூ உலகிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்.

அன்புடன்,
அத்திவெட்டி ஜோதிபாரதி.

4. Vijay - ஏப்ரல் 3, 2008

Welcome to ThamizmaNam….

Kavithai nantraga uillathu…

5. நிலாரசிகன் - ஏப்ரல் 6, 2008

ஏற்கனவே படித்த கவிதையெனினும் மீண்டும் வாசிக்கையில் பல கிளைகளிலும் பயணிக்கிறது எண்ணங்கள்.

வாழ்த்துக்கள்.

6. ஆர்.நாகப்பன். - ஏப்ரல் 11, 2008

எல்லாவிதமான கற்பிதங்களையும் வாழ்க்கை பந்திவைக்கின்ற சந்தர்ப்பங்கள் தான் தற்போதைய சுயமாய் இருக்கிற சமயங்களில் சுயம்புகள் கூட சூத்திரம் மறக்கிற அதிசயங்கள் முகமன்காட்டவே செய்கின்றன. தங்களின் கவிதை இட்டு சென்ற தளம் கொஞ்சம் உசரமானதாக இருந்தாலும் என்னை அந்நியப்படுத்தாததாகவே இருந்தது ஒரு ஆறுதல்…..

ஈரமண்ணின் நேசத்துடன்,
ஆர்.நாகப்பன்.

7. uumm - ஏப்ரல் 15, 2008

very nice..ma


பின்னூட்டமொன்றை இடுக